பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறியதாக கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பெட்ரோல், டீசல் ,சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டி கோவையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை பவர் ஹவுஸ் சிவானந்த காலனி பகுதியில், 50 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் விறகு அடுப்பை வைத்து நூதன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலை உயர்வால், பொதுமக்களை மத்திய மாநில அரசுகள் வஞ்சிப்பதாக கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.