பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் கடைசி பெட்டியில் 10 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்த ரயில்வே போலீசார் அதை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ரயில்வே இருப்புப் போலீசார் ரயில்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் இன்று காலை 11 மணியளவில், கோவை ரயில் நிலையம் வந்தடைந்தது.

அப்போது கோவை ரயில்வே இருப்புப் பாதை போலீசார் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரயில் கடைசி பெட்டியில் (ஜெனரல் கோச்) கழிவறை அருகே இருந்த பையை சோதனை செய்தபோது அதில் பார்சல்களாக மடிக்கப்பட்ட 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அதை யார் கொண்டு வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.