இக்கூட்டத்தில், பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள், கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சுகாதார பிரச்சனை என்பது தொடர்கதையாகவே உள்ளது என்பதை முன்வைத்தனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலத்தின் கூட்டம், மேற்கு மண்டல அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தலைமையில் இன்று நடைப்பெற்றது.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், மேற்கு மண்டல உதவி ஆணையர், உதவி நிர்வாகப் பொறியாளர் மற்றும் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள், அவரவர் வார்டுகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தனர். இருந்த போதும், கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலுமே சுகாதார பிரச்சனை என்பது தொடர்கதையாகவே உள்ளது என்று பங்கேற்ற அனைத்து மாமன்ற உறுப்பினர்களும், முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த, மேற்கு மண்டல உதவி நிர்வாகப் பொறியாளர் பதில் அளித்தபோது, கோவை மாநகராட்சிக்கு புதிதாக 275 குப்பை சேகரிப்பு டெம்போ கொடுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில், 105 டெம்போக்கள் புதிதாக தற்போது வாங்கப்படவுள்ளது, என்றார்.
அவருடைய பதிலுக்கு கேள்வி எழுப்பிய மாமன்ற உறுப்பினர்கள், தினசரி கழிவுகளை எவ்வாறு டெம்போ மூலம் அகற்ற முடியும். குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளுக்கு எப்படி டெம்போ மூலம் குப்பைகளை வாங்க முடியும்? அனைத்து தெருக்களும் சிறிதாக உள்ளதால், இது கடினமான செயலாகவே இருக்கும், என்றனர்.
எனவே, தள்ளுவண்டி என்பதே குப்பை சேகரிப்புகளுக்கு தகுந்த வாகனமாக இருக்கும், எனவும் தெரிவித்தனர். ஆகையால், முறையாக அனைத்து தெருக்களில் இருந்தும் குப்பைகளை அகற்ற தள்ளுவண்டி தேவை, என்பதை முன்வைத்தனர்.