கோவை துடியலூரில் கஞ்சா விற்பனை - 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கு இடமாக இடத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா இருந்தது தெரியவந்தது.


கோவை: கோவையில் கடந்த சில தினங்களாக கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தடுப்பு பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் இருவரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா இருந்தது தெரியவந்தது.

முதல்கட்ட விசாரணையில், பிடிப்பட்ட நபர்கள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (22) தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பதும் அவர்கள் உள்ளூர் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3.8 கிலோ கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...