வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் ரூ.15.45 கோடி பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர், அழகு சுந்தரவல்லி தலைமையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர், அழகு சுந்தரவல்லி தலைமையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



மக்களுக்கு தேவையான பல்வேறு வேலைகள் செய்யப்படாமல் இருந்த நிலையில், அவற்றை விரைந்து முடிக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இன்று, நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 21 வார்டுகளுக்கு, 83 வேலைகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், சாலை வசதி, மின்சார வசதி தெருவிளக்கு, நிழற்குடை வசதி, பொது மக்கள் குடியிருப்பு, பாதுகாப்பு சுவர், தடுப்பு சுவர், பள்ளி சத்துணவு மையம் பராமரித்தல் போன்ற வேலைகள் நகராட்சிக்கு வாகனம் வாங்குவதற்கு போன்ற பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



முன்னதாக, நகர்மன்ற கூட்டத்தில் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும், அவரவர் வார்டு பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான வசுது வாதிகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் மனு வழங்கினர்.

இந்த மனுவை, நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் பார்வைக்கு வைக்கப்பட்டு, இதில் 83 பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வால்பாறையில் மொத்தம் 21 வார்டுகள் உள்ள நிலையில், அதில், 20 திமுக உறுப்பினர்கள் மற்றும் 1 அதிமுக உறுப்பினர் உள்ளனர். இந்த நிலையில், திமுக கட்சி அறிவிக்காத நகர்மன்றத் தலைவருக்கு சாதகமாக உள்ள வார்டு உறுப்பினர்களின் வார்டு பகுதியில் அதிகப்படியான வேலைகளையும், நகர்மன்ற தலைவர் சாதகமாக இல்லாதவர்களுக்கு குறைந்த வேலையும் கொடுப்பதாக குற்றம் சாட்டி, நகர்மன்ற கூட்டத்தில் சிறிது நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.



தற்போது, 83 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வரக்கூடிய நகர்மன்ற கூட்டத்தில் மக்களுக்குத் தேவையான வேலைகளை செய்து தர தீர்மானம் நிறைவேற்றப்படும், என்று நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...