துப்புரவு பணியாளர்களின் ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு கோவை மேயர் உத்தரவு..!

தெற்கு மண்டலம் மிக மோசமான நிலையில் உள்ளது. அரசு அதிகாரிகள் சரிவர பணியாற்றுவதில்லை ஆகையால், கோவை மாநகராட்சி ஆணையர், மேயர், துணை மேயர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்று மேயர் தெரிவித்தார்.


கோவை: கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு பிறப்பித்தார்.



இன்று நடைபெற்ற கோவை தெற்கு மண்டல கூட்டத்தில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கூறியதாவது:-

78-வது வார்டில் ஒன்றை மாத காலமாக துப்புரவுப் பணியாளருக்கான மேஸ்திரி இல்லாத நிலை உள்ளது. 78-வது வார்டுக்கு உட்பட்ட 14-துப்புரவு பணியாளர்கள் பக்கத்து வார்டுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், உங்கள் வார்டுகளில் குப்பை அகற்றுவதற்கான ஆட்கள் இல்லை நீங்கள் அலுவலகத்தில் புகார் செய்யுங்கள் என்று மக்களிடத்தில் துப்புரவுப் பணியாளர்கள் கூறிவருகின்றனர்.

நிரந்தர பணியாளர்கள் 29-நபர்கள் ஒப்பந்த பணியாளர்கள் 3-நபர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களைக் கொண்டு எவ்வாறு கழிவுகளை அகற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அதிகாரிகள், பக்கத்து வார்டுகளில் இருந்து அனைத்தையும் உங்களுக்குச் செய்து தருகிறேன் என்று கூறுகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என்று அதிகாரியை சுட்டிக்காட்டினர். எங்கள் பகுதியில், தினமும் 8-துப்புரவுப் பணியாளர்கள் விடுப்பு எடுக்கின்றனர்.

இவை அனைத்தையும் கேட்டறிந்த மேயர் கூறியதாவது:-

தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் ஒப்பந்ததாரர்கள் மாற்றப்பட வேண்டும் என்று மேயர் உத்தரவு பிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து, தெற்கு மண்டலம் மிக மோசமான நிலையில் உள்ளது. அரசு அதிகாரிகள் சரிவர பணியாற்றுவதில்லை ஆகையால் கோவை மாநகராட்சி ஆணையர், மேயர், துணை மேயர் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்று மேயர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...