கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல கூட்டம்..!

இக்கூட்டத்தில், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பன்றிகள் மற்றும் நாய்களை உடனடியாக பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.


கோவை: பன்றிகள் மற்றும் நாய்களை உடனடியாக பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல கூட்டம், குனியமுத்தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் கோவை தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது.



கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், தெற்கு மண்டல உதவி ஆணையர், உதவி பொறியாளர்கள், மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூறியதாவது:-

இக்கூட்டத்தில் ஜெயா நகரில் பூங்காவினை அமைக்கும் பணிகள் குறித்து தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, 86-வது வார்டில் நாய் கருத்தடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கான 2 கருத்தடை மையம் மட்டுமே உள்ளது. நாய்கள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. நாய்கள் மற்றும் பன்றிகளின் தொல்லை சரி செய்ய வேண்டும்.



தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பூங்காக்களைப் பராமரிக்க கூறியும், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை போன்ற கேள்விகள் அரசு அதிகாரிகளிடம் மாமன்ற உறுப்பினர்களால் கேட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, அதிகாரிகள் பதில்கள் எதுவும் கூறப்படாத நிலையில் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று 95-வது மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மக்களுக்கான பொது குழாய் மாமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் அமைக்கப்பட்டுள்ளது என்று 94-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.



பன்றிகள் மற்றும் நாய்களை உடனடியாக பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...