கோவையில் பெ.நா.பாளையத்தில் வீட்டில் ஆள் இருக்கும் போதே வீடு புகுந்து நகை திருட்டு

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சுமார் 25 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், பீரோவை திறந்து உள்ளே இருந்த சுமார் 7 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த ஜி.கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி.

நேற்று இரவு, இவரது, தாய் வள்ளியம்மாள் வீட்டின் முன்பகுதியிலும், அய்யாசாமியின் மனைவி கலாமணி வீட்டில் உள்ள ஹாலில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் முன் கதவு அடைக்காமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சுமார் 25 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்த சுமார் 7 சவரன் நகைகளை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது, சத்தம் கேட்டு எழுந்த கலாமணி அந்த மர்ம நபரை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இச்சம்பவம், குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...