தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை நாம் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதையும் தாண்டி பணிக்கு வராதவர்கள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர்.

குறிப்பாக குடிநீர், மற்றும் சாலை சீரமைப்பு, தூய்மை பணிகள் குறித்து தெரிவித்தனர். அதில் பிரதானமான உறுப்பினர்கள் கூறும்போது, தங்கள் வார்டுகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்கள் குறைவாக உள்ளதாகவும், பெரும்பாலானோர் பணிகள் செய்வது இல்லை எனவும் புகார் அளித்தனர்.
அப்போது மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசும் போது,பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டு தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவை பார்ப்பதில்லை. பல்வேறு வார்டுகளில் சில தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவில் கையெழுத்திட்டு விட்டு பணிக்கு செல்வதில்லை.
எனவே அனைத்து வார்டு உறுப்பினர்களும் தங்கள் வார்டுகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை காலையில் நேரில் சென்று கண்டிப்பாக பார்க்க வேண்டும். எனது வார்டில் நான் தினமும் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை கண்காணித்து வருகிறேன்.
இதை பெருமைக்காக சொல்லவில்லை, தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை நாம் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதையும் தாண்டி பணிக்கு வராதவர்கள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம். புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.