ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் கோவை ஆட்சியர் அலுவலக மேற்கூரை சீரமைப்பு பணிகள்; 2 மாதங்களுக்கு பின் முழுமையாக இடிப்பு..!

ஆமை வேகத்தில் மெதுவாக சுமார் 2-மாதமாக இழுத்தடித்து ஒரு வழியாக மேற்கூரை முற்றிலுமாக அகற்றி உள்ளனர். இது இடிக்கப்பட்டு 2 தினங்கள் ஆகியும், கட்டிட கழிவுகள் அகற்றாமல் அதே பகுதியில் போட்டு வைத்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மேற்கூரையை கடந்த 2-மாதமாக ஆமை வேக பணியில் முழுமையாக அகற்றியுள்ளனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பழைய கட்டிடத்தில் உள்ள மூன்று தளங்களில்,சமூக நலத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, குழந்தைகள் நலத்துறை, இ-சேவை மையம்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தில் அண்மையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கட்டிடத்தின் முகப்பில் உள்ள மேற்கூரை பழுதடைந்து மோசமாக இருந்தது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் இடம் என்பதால் மேற்கூரையை சீரமைக்கும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மார்ச் 6ஆம் தேதி அங்கு ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது, மேற்கூரை மிகவும் வலுவிழந்த நிலையில் இருப்பதும் தெரியவந்தது. மேற்கூரையின் ஒரு பகுதியில் இடித்த போது, திடீரென மேற்கூரையில் ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் இடிந்து கீழே விழுந்தது.



இதையடுத்து பணியில் இருந்த ஊழியர்கள் விலகி நின்றவாறு சிமெண்ட் காரைகளை அகற்றினார். அதே போல் மேற்கூரைக்கு தூண்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், கம்பிகளும் மோசமாக இருந்தது.



அதை தொடர்ந்து ஆமை வேகத்தில் மெதுவாக மேற்கூரையை சுமார் 2 மாதமாக இழுத்தடித்து ஒரு வழியாக மேற்கூரை முற்றிலுமாக அகற்றி உள்ளனர். இந்த மேற்கூரை இடிக்கப்பட்டு 2 தினங்கள் ஆகியும் இது அந்த கட்டிட கழிவுகளை அகற்றாமல் இப்போது வரை அதே பகுதியில் போட்டு வைத்துள்ளனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...