உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் கூட்டங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் கூட்டங்களிலும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மேலும், விபத்து ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைத்திட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறையினர் ஆய்வு கூட்டம் மேற்கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகள் அதி வேகமாக செல்வதை தவிர்த்து இருசக்கர வாகனங்களை இயக்கும்போது ஹெல்மெட் அணிய வேண்டும்.

நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே விபத்துகள் குறையும். சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் கூட்டங்களிலும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்பது எடுத்துரைக்கப்பட்டது.

முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து நிகழும் பொழுது பாதிக்கப்பட்டவரை ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி பெறுவதற்கு உதவி செய்யும் பொதுமக்களை பாராட்டும் வகையில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை ஆணையகத்தால் "GOOD SAMARITAN AWARD" வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

இந்த விருதுக்கு தகுதியான நபர்களின் முன்மொழிவுகள் மாவட்ட அளவிலான குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவுகள் போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்பட உள்ளது. நெடுஞ்சாலை துறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விபத்தில்லா மாவட்டமாக கோவை மாவட்டத்தை உருவாக்கிட தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.



இந்த கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன், போக்குவரத்து துணை ஆணையர் உமா, மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர்கள் போக்குவரத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...