பராமரிப்பு ஒப்பந்தங்கள் மூலம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாரதி பார்க் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பாரதி பார்க் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய துணை தலைவர் சசிகுமார் தலைமையில் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் "பராமரிப்பு ஒப்பந்தங்கள் மூலம் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை சரி செய்ய ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியம் பிடிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், பொருத்துனர் மின் பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஊதியக் குறைப்பு செய்து போடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், சென்னையில் காத்திருப்பு போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்க தமிழக அரசு ஒதுக்கீடு செய்த 100 கோடி ரூபாய் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி வழங்கிட வேண்டும்" என்று பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், "நிதி நிர்வாகச் சீர்கேட்டின் விளைவாக குடிநீர் வடிகால் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதை சரி செய்ய ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை வெட்டி குறைக்கிற நடவடிக்கையில் வாரிய நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

குடிநீர் உற்பத்தி செலவு கூடியுள்ளதை ஈடுகட்ட தமிழக அரசிடமிருந்து மானியம் பெறாமலும், உள்ளாட்சி அமைப்புகள் வாரியத்திற்கு தர வேண்டிய ரூ.800 கோடி குடிநீர் கட்டண பாக்கியை வசூலிக்காமல் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை சரிபாதியாக வெட்டுகிற அநீதியான உத்தரவை பிறப்பித்துள்ளது.



மேலும், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை நியமிக்காமல் நியமனம் செய்ததாகக் கூறி முறைகேடாக பில் போட்டு மாதா மாதம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதே போன்ற போலியான பெயரில் இஎஸ்ஐ, இபிஎப் கட்டியதாக ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் இணைந்து கூட்டு கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

தேவைக்கேற்ப ஊழியர்கள் நியமிக்காததால் குடிநீர் திட்டங்கள் முறையான பராமரிப்பின்றி பழுதுகள், உடைப்புகள் என தேவையற்ற செலவுகள் மூலம் வாரியப் பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் மட்டும் சீரான பதவி உயர்வு, 6 மாதத்திற்கு ஒரு முறை பஞ்சப்படி உயர்வு வருடாந்திர ஊதிய உயர்வு, உள்ளிட்ட அனைத்து பண பலன்களையும் தவறாமல் பெற்று வரும் போது நிதி நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழலால் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடிக்கு ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் தான்", என தெரிவித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய சம்மேளன தலைவர் பாலகுமார், மாவட்ட தலைவர் பிரான்சிஸ், பொதுச்செயலாளர் சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...