கோவை ராணுவ வீரருக்கு மேகாலயாவில் சிலை..!

ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் வீரத்தை போற்றும் வகையில் மேகாலயாவில் உள்ள டெக்கான் டேவில்ஸ் யூனிட் சார்பில் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையைச் சேர்ந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் உருவச்சிலை மேகாலயாவில் உள்ள ராணுவ மையத்தில் திறக்கப்பட்டது.

கோவை நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. கடந்த, 93-ம் ஆண்டு காஷ்மீர் சம்சாபாரி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவியதாகத் தகவல் கிடைத்தது.

உடனடியாக எல்லைப் பகுதிக்கு கென்னடி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் விரைந்தனர். நான்கு பயங்கரவாதிகளை கென்னடி சுட்டு வீழ்த்தினார். முகாமுக்கு திரும்பியபோது பனி பாறைகளுக்கு இடையே கென்னடியின் கால் சிக்கிக்கொண்டது. இதனால், தப்பி ஓடிய பயங்கரவாத கும்பல், கென்னடியை நோக்கி சுட்டது.

இதில், அவர் வீரமரணம் அடைந்தார். கென்னடியின் வீரத்தைப் போற்றி, 'கீர்த்தி சக்ரா' விருது கொடுத்து, இந்திய அரசு கௌரவப்படுத்தியது. அவரது நினைவாக நாயக்கன் பாளையத்தில் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

அதில், அவர் பயன்படுத்திய பொருட்கள், ராணுவத்தில் பணியாற்றிய போது பெற்ற பதக்கங்கள் உள்ளிட்ட பொருள்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கென்னடியின் வீரத்தை போற்றும் வகையில் மேகாலயாவில் உள்ள டெக்கான் டேவில்ஸ் யூனிட் சார்பில் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழா நிகழ்ச்சியில், கென்னடியின் குடும்பத்தினர் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...