குடிமகன்களே உஷார்.. கோவையில் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த ஒருவர் பலி..!

கோவையில் கள்ளச்சந்தையில் மது வாங்கி, மதுக்கடையில் இருந்த தண்ணீர் கலந்து குடித்த திமுக நிர்வாகி உயிரிழந்ததோடு, மற்றொருவருக்கு கண் பார்வை இழப்பும் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்ததிமுக பிரமுகர் உயிரிழந்தார்.

கோவை பேரூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (53). அப்பகுதியில் திமுக துணை செயலாளராக இருந்து வருகிறார். இவரது நண்பர் சிவா.

சிவா அப்பகுதியின் வார்டு செயலாளராக இருந்து வருகிறார். இருவரும் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றிற்கு மது அருந்த சென்றனர். 1680 என்ற எண்ணிட்ட கடை திறக்கப்படாததால் இருவரும், அருகில் உள்ள மதுபான கூடத்தில் கள்ளச்சந்தையில் மதுவாங்கி அங்கு கேனில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை கலந்து மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய சிறிது நேரத்திலேயே, இருவருக்கும் வாந்தி ஏற்பட்டதோடு, மயக்கமடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட சிவாவிற்கு கண் பார்வை கோளாறு ஏற்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள செல்வபுரம் போலீசார், கள்ளச்சந்தையில் வாங்கிய மதுவில் கலப்படம் இருந்ததா அல்லது மதுபான கடையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கலப்படம் நிகழ்ந்துள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலை 11.30-மணியளவில் மதுபான கடை திறப்பதற்கு முன்பாக கள்ளச்சந்தையில் மதுவாங்கி அருந்திய திமுக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...