கோவையில் அரசு பள்ளி மாணவ -மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்..!

இரண்டு வருடங்களுக்கு பிறகு கோவையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


கோவை: HCL பவுண்டேஷன் ஸ்போர்ட்ஸ் ஃபார் சேஞ்ச் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசுப் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கானவிளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.



கோவையில் மாவட்ட அளவில் 14-வயதிற்குட்பட்ட அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.



தனியார் அமைப்பினர் நடத்திய இந்த போட்டியில் கைப்பந்து, கபடி, கால்பந்து, கையுந்து பந்து, பூப்பந்து, எறிபந்து, வளைகோல் பந்து, கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிமாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.



இதில் 100-மீட்டர், 200-மீ, 400-மீ, 800-மீ, 1,500-மீட்டர் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும்நடைபெற்றது.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...