கோவையில் தடையை மீறி பயன்படுத்திய 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,200 அபராதம்!

கோவை மாநகராட்சி வார்டு எண் 81-க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை மீறி பயன்படுத்திய 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா, உத்தரவின்படி, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.81-க்கு உட்பட்ட கடைகளில்‌, தமிழக அரசால்‌ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை பயன்படுத்தியதால்‌ 15 கிலோ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, கடைகளின்‌ உரிமையாளர்களுக்கு மொத்தம்‌ ரூ.4,200 அபராதம்‌ விதிக்கப்பட்டது.



இது தவிர, இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் தூய்மை பணிகள், டெங்கு ஒழிப்பு பணிகள், தார் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவின்படி நடைபெற்றது.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.18-க்கு உட்பட்ட அருணா நகர்‌, ஜெய்‌ நகர்‌, பாங்கோ வீதி பகுதிகளில்‌ மர அறுவை இயந்திரம்‌ மூலம்‌ காய்ந்த மரம்‌, செடிகளை அரைக்கும்‌ சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.25க்கு உட்பட்ட காந்தி மாநகர்‌ பகுதியில்‌ மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌, வீடு வீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொதுமக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா..? என்பதை கண்டறியும்‌ பணிகளில்‌ நடைபெற்றது.



மேலும், மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.71-க்கு உட்பட்ட டி.வி.சாமி சாலையில்‌ தார் சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...