கோவை மாநகராட்சி வார்டு எண் 81-க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை மீறி பயன்படுத்திய 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா, உத்தரவின்படி, மத்திய மண்டலம் வார்டு எண்.81-க்கு உட்பட்ட கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.4,200 அபராதம் விதிக்கப்பட்டது.

இது தவிர, இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் தூய்மை பணிகள், டெங்கு ஒழிப்பு பணிகள், தார் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவின்படி நடைபெற்றது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.18-க்கு உட்பட்ட அருணா நகர், ஜெய் நகர், பாங்கோ வீதி பகுதிகளில் மர அறுவை இயந்திரம் மூலம் காய்ந்த மரம், செடிகளை அரைக்கும் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.25க்கு உட்பட்ட காந்தி மாநகர் பகுதியில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா..? என்பதை கண்டறியும் பணிகளில் நடைபெற்றது.

மேலும், மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.71-க்கு உட்பட்ட டி.வி.சாமி சாலையில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.