மூலப்பொருள்‌ விலை உயர்வை‌ கட்டுப்படுத்த‌ கோரி கோவை தொழில்‌ அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ டில்லி பயணம்‌..!

கொடிசியா உள்ளிட்ட ஒன்பது தொழில்‌ அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ இன்று டில்லி சென்று அமைச்சர்களைச்‌ சந்தித்து மூலப்பொருள்‌ விலை உயர்வு குறித்த கோரிக்கைகளை நேரில்‌ எடுத்துரைக்க உள்ளனர்‌.


கோவை: தொழிற்சாலைகளுக்குத்‌ தேவையான மூலப்பொருட்களின்‌ விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால்‌, விலை உயர்வை‌ கட்டுப்படுத்த‌ கோரி கோவை தொழில்‌ அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ டில்லி பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறியுள்ளதாவது:-



தொழிற்சாலைகளுக்குத்‌ தேவையான மூலப்பொருட்களின்‌ விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால்‌, சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழிற்சாலைகள்‌ கடமையாக பாதிக்கப்பட்டு தொழிலைக்‌ கைவிடும்‌ நிலையில்‌ உள்ளன.

மத்திய அரசு உடனடியாக இதில்‌ தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால்‌, பல தொழிற்சாலைகள்‌ மூடப்படும்‌ சிக்கல்‌ எழுந்துள்ளது. இயல்புக்கு மாறாக அளவு கடந்து உயர்ந்து வரும்‌ மூலப்பொருட்களின்‌ விலை காரணமாக, தொழிற்சாலைகளின்‌ ஆர்டர்கள்‌ கேன்சலாவது, சந்தையில்‌ நிச்சயமற்ற தன்மை, குறைந்து வரும்‌ ஏற்றுமதி, தொழிற்சாலைகள்‌ மூடல்‌ என பல சிக்கல்கள்‌ உருவாகி வருகின்றன.

இந்த நிலையில்‌ நாராயண்‌ டி ரானே, மத்திய சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழிற்துறை அமைச்சர்‌, ராம்‌ சந்திர பிரசாத்‌ சிங்‌, மத்திய உருக்குத்துறை அமைச்சர்‌ மற்றும்‌ பியூஷ்‌ கோயல்‌, மத்திய வணிகம்‌ மற்றும்‌ தொழிற்துறை அமைச்சர்‌ ஆகியோரை கோவையில்‌ உள்ள தொழில்‌ அமைப்புகள் தனித்தனியாகவும்‌, இணைந்தும்‌ இதுகுறித்து கடிதங்கள்‌ எழுதியும்‌, கோரிக்கை வைத்தும்‌ வந்தனர்‌.

மேலும்‌, நேரில்‌ சந்தித்து முறையிடுவதற்கும்‌ அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அந்த வகையில்‌ நேரில்‌ சந்திக்க அனுமதி‌ தற்போது கிடைத்துள்ளதால்‌, கொடிசியா உள்ளிட்ட ஒன்பது தொழில்‌ அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ இன்று டில்லி சென்று அமைச்சர்களைச்‌ சந்தித்து மூலப்பொருள்‌ விலை உயர்வு குறித்த கோரிக்கைகளை நேரில்‌ எடுத்துரைக்க உள்ளனர்‌.

இந்த மூலப்பொருள்‌ விலை உயர்வு குறித்த சிக்கலுக்கு விரைந்து தீர்வுகாண, துறை சார்ந்த அமைச்சர்கள்‌ ஆவன செய்வார்கள்‌ என நம்புகிறோம்‌.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...