'குற்றவாளிகள் ஜாக்கிரதை': திருப்பூரில் 50-கேமராவுடன் உற்றுநோக்கும் 'மூன்றாவது கண்' எனப்படும் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா..!

பெருகி வரும் குற்ற சம்பவங்களால் காவல்துறையினருக்கு ஏற்படும் மன உளைச்சலை குறைக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை துரிதமாக கண்டுபிடிப்பதற்காக அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: பெருகி வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருப்பூர் தெற்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட 50 இடங்களில் மூன்றாம் கண் எனப்படும் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நடைபெற்றது.



பெருகி வரும் குற்ற சம்பவங்களால் காவல்துறையினருக்கு ஏற்படும் மன உளைச்சலை குறைக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை துரிதமாக கண்டுபிடிப்பதற்காக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 50 இடங்களில் மூன்றாம் கண் எனப்படும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.



இதனை திருப்பூர் தெற்கு சரக துணை ஆணையர் ரவி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து அதிநவீன கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கு உதவி புரிந்த தொழிலதிபர்களுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் கே.வி.ஆர். நகர் சரக உதவி ஆணையர் வரதராஜன், திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் உதவி ஆணையர் செல்வம் தங்கம், திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையா உள்ளிட்ட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...