கோவையில் பிறந்த சிசுவுடன் இறந்து கிடந்த பெண் காட்டு யானை - கருச்சிதைவால் உயிரிழப்பா? வனத்துறை, கால்நடை மருத்துவர்கள் ஆய்வு..!

உயிரிழந்த பெண் யானை மற்றும் சிசுவிற்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.



கோவை: கோவை வனப்பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் உடல்நலக் குறைவாலும், இயற்கைக்கு முரணான முறையிலும் உயிர் இழந்து வருகிறது.

கடந்த 100-நாட்களில் சுமார் 14-யானைகள் உயிரிழந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை கோவை சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மூதூர் பெத்திகுட்டை, இரட்டை கண் பாலம் அருகே வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வன எல்லையில் சுமார் 30 மீட்டர் தொலைவில் உள்ள பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் இளம் பெண் யானை கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் சிசுவுடன் இறந்து கிடந்துள்ளது.

இதைக்கண்ட வனத்துறை ஊழியர்கள் உடனடியாக உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளித்தனர். உயிரிழந்த பெண் யானை மற்றும் சிசுவிற்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

அதன்பின்னரே யானை இறப்புக்கான காரணம் தெரியவரும். தொடர்ந்து காட்டு யானைகள் உயிரிழந்து வந்த நிலையில், சிசுவுடன் பெண்யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...