'நரிக்குறவர்' வேறு, 'குருவிக்காரன்' வேறு, சாதி சான்றிதழில் தங்கள் சாதியை சரியாக குறிப்பிட வேண்டி கோவையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு குறவன், மலைக்குறவன் மற்றும் குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் குறிஞ்சியர் சமூகநீதி பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: சாதி சான்றிதழ் வழங்கும் போது, தங்களது சாதியை சரிவர குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு குறவன், மலைக்குறவன் மற்றும் குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் குறிஞ்சியர் சமூகநீதி பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழக அரசு சாதி சான்றிதழ்கள் வழங்கும் போது "குருவிக்காரன்" சாதி மக்களுக்கு "நரிக்குறவர்" என குறிப்பிடுவதாகவும், நரிக்குறவர் வேறு தாங்கள் வேறு என்பதால் தங்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் "குருவிக்காரன்" அல்லது "நக்காலா"(இராஜதானியின் அடிப்படையில்) என குறிப்பிட்டு தர வேண்டுமென வலியுறுத்தினர்.



குருவிக்காரர்களை, குறவன் என குறிப்பிடுவதால் இரு சமூகத்தினருக்கு அவ்வப்போது மோதல்கள் நிகழ்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



ஆர்பாட்டத்தில கலந்து கொண்ட 20க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். எனவே, தமிழக அரசு தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...