இன்று உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, கோவையில் சுகாதார அலுவலர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினமாக கொண்டாடப்படுகிறது.
மலேரியா நோயை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO), கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதியை உலக மலேரியா தினமாக அறிவித்தது.
அந்த வகையில் ஏப்ரல் 25 ஆம் தேதியான இன்று உலக மலேரியா தினம் கோவையில் அனுசரிக்கப்பட்டது.

இதனை, முன்னிட்டு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார அலுவலர்கள் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

அதேபோல, மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.87 க்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு கொசுவினால் பரவும் டெங்கு நோய் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.