கோவை தனியார் மருத்துவ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!

கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி விடுதி அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் உள்ள தனியார் (பி.எஸ்.ஜி) மருத்துவக் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி விடுதி அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மாணவ - மாணவியர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்வர்தன். இவரது மகள் நந்தினி (22). கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மாணவராக நான்காம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.

கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த நந்தினி, இன்று காலை 11.30 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், "அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை பயன்படுத்திக் கொண்டு மணிக்கட்டு நரம்புகளை அறுத்த பின்னர், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவியின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விமானம் மூலம் மாணவியின் பெற்றோர்கள் கோவை வந்தடைய உள்ளனர்.

அவர்கள் வந்த பிறகு, மாணவியின் உடல், உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது" என்றனர்.

தற்கொலைக்கான முழு காரணம் இன்னும் தெரியவில்லை என்ற சூழலில், போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...