கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தனியார் அபார்ட்மென்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் விசரானை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் அப்பார்மென்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவைவடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் உள்ளது தக்க்ஷா ஷான்ஷ்ராய் ,(Daksha Sanshray) என்ற குடியிருப்பு வளாகம். அங்கு ஃபேஸ் 2 வில், பிரதீஷ், அவர் மனைவி சுகன்யா மற்றும் அவர்களது 11 வயது மகன் லட்ஷன், வசித்து வந்தனர். தனியார் மருத்துவமனையில் சிறுவனின் தாயார்செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன், நேற்றுஇரவு அபார்ட்மென்ட்டில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, அங்கு கீழே கிடந்த மின்சார ஒயரை தெரியாமல் மிதித்ததில், சிறுவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து, சிறுவனை அங்கிருந்தவர் மீட்டு, முதல் உதவிசிகிச்சை செய்ததாக தெரிகிறது. இருப்பினும், சிறுவன் மயக்க நிலையிலேயே தொடர்ந்து இருந்ததால், அவரை அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தகவலறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து,சிறுவனின் உடலைபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அபார்ட்மென்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன், பூங்காவில் கீழே கிடந்த ஓயரில் வந்த மின்சாரம் தாக்கி, உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.