வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: கிராம சபை கூட்டத்தில் கோவை ஆட்சியர் அறிவிப்பு

தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு, கோவையில் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டியில், மாவட்ட ஆட்சியர் சமீரன் மேற்பார்வையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


கோவை: நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்துராஜ் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதைத் அடுத்து, கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில், மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.



தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு, கோவையில் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன் மேற்பார்வையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மேற்பார்வையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் துறை, சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்த கிராம சபை கூட்டத்தில் கிராமத்தில் வாழும் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு உள்ளது எனவும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது எனவும் இதை குறைக்கும் வகையில் கீரைகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் அதிகரித்துள்ளதாகவும் அதை தடுப்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.



தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் முறையான நீர் மேலாண்மை, தூய்மையான கிராமம், பாலின சமத்துவ அடிப்படையில் தரமான கிராம ஊராட்சி, மாற்றுத்திறனாளி நலன் உள்ளிட்ட பல்வேறு நலன்கள் குறித்து அதிகாரிகள், கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர்கள் ஆகியோர் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.



தொடர்ந்து, இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பட்டா வசதி, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு ஒரு கிராமத்தில் என்ன தேவை இருக்கின்றது என்பது குறித்த கருத்துக்களை இந்தக் கூட்டத்தில் விவாதித்தோம் என்றார். அதேபோல, பஞ்சாயத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு உரிமையுடன் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.



இதைத்தொடர்ந்து ஒரே குடும்பத்தில் தாய் தந்தைக்கு கீழ் 4 வாரிசுகள் தனித்தனி குடும்பமாக வாழும் பட்சத்தில், இதில் வீடு இல்லாத வாரிசுகளுக்கு வீடு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வருவாய் சூழல் கருதி இலவச வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கான சர்வே வருவாய்த்துறை முன்னெடுக்கும் என தெரிவித்தார். இலவச வீடு தொடர்பாக 150க்கும் மேற்பட்டோரின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, துணைத் தலைவர் ராஜன் மற்றும் திட்ட இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...