கோவை புலியகுளம் அருகே தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மகனை மடக்கி பிடித்து கைது..!

கோவையில் ஓய்வூதிய பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தந்தையை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மகனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை புலியகுளம் பகுதியில் ஓய்வூதிய பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தந்தையை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மகனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (61). இவரது மனைவி வசந்தி. பெயிண்டர் வேலை பார்த்து வந்த அவர் மகன் சுரேஷ்,

திருமணமாகி சிங்காநல்லூர் பகுதியில் தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கருப்பசாமி கடந்த சில மாதங்களாக வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. மேலும், கருப்பசாமி தனக்கு வந்த ஓய்வூதிய பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் புளியகுளம் அருகே சாலையில் வைத்து சுரேஷ், கருப்பசாமியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.

இச்சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சுரேஷை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை அவரது செல்போன் சிக்னலை வைத்து சுரேஷை மடக்கி பிடித்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சுரேஷை சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...