முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - தென்னிந்திய ஜவுளி தொழில் துறையினர்!

பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி அதை பெற்றுத் தந்தமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய ஜவுளி தொழில் துறையினர் நேரில் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை: தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர் ரவி சாம், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் இணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் கே.ஜி. பிரித்வி தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்‌.கே.கணேசன், கரூர் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இணை செயலாளர் ஏ.சேதுபதி ஆகியோர் சந்தித்து பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11% சதவீத வரியை நீக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி அதை பெற்றுத் தந்தமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். உடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி, கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இஆப, துணிநூல் துறை ஆணையர் மா.வள்ளலார் இஆப ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...