பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி அதை பெற்றுத் தந்தமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய ஜவுளி தொழில் துறையினர் நேரில் நன்றி தெரிவித்தனர்.
கோவை: கோவை: தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர் ரவி சாம், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் இணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் கே.ஜி. பிரித்வி தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.கே.கணேசன், கரூர் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இணை செயலாளர் ஏ.சேதுபதி ஆகியோர் சந்தித்து பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11% சதவீத வரியை நீக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி அதை பெற்றுத் தந்தமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். உடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி, கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இஆப, துணிநூல் துறை ஆணையர் மா.வள்ளலார் இஆப ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
