கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தோட்டத் தொழிலாளி போக்சோவில் கைது!

பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமின் போது, சிறுமி தன் உடல் உபாதைகள் குறித்து தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், பரிசோதனை செய்த போது, சிறுமிக்கு பாலியல் சீண்டல்கள் நடந்திருப்பது தெரியவந்தது.


கோவை: மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரத்தினம் (47) என்பவர், கோவையில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், தோட்ட உரிமையாளரின் 8 வயது மகள், தோட்டத்தில் விளையாட சென்ற போது ரத்தினம் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமி படிக்கும் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

அப்போது, பரிசோதனைக்கு சென்ற சிறுமி தன் உடல் உபாதைகள் குறித்து தெரிவித்துள்ளார். அப்போது, மருத்துவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது, சிறுமிக்கு பாலியல் சீண்டல்கள் நடந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், ரத்தினம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...