'கோவிலை காப்போம்; கோவையை காப்போம்' 24 ஆம் தேதி மாபெரும் க‌ண்ட‌ன ஆர்ப்பாட்டம் - இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் சமீப கால‌மாக‌ முஸ்லிம் அமைப்பின‌ர் அமைதிக்கு குந்த‌க‌ம் விளைவிக்கும் செய‌ல்க‌ளில் ஈடுப்ப‌டுகின்ற‌ன‌ர். எனவே, இந்து முன்ன‌ணியின‌ர் மாபெரும் க‌ண்ட‌ன ஆர்ப்பாட்டத்தை ந‌ட‌த்த‌ உள்ளோம் - காடேஸ்வ‌ரா சுப்பிர‌ம‌ணிய‌ம்.


கோவை: "சமீப கால‌மாக‌ முஸ்லிம் அமைப்பின‌ர் கோவையின் அமைதிக்கு குந்த‌க‌ம் விளைவிக்கும் செய‌ல்க‌ளில் ஈடுப்ப‌டுகின்ற‌ன‌ர். எனவே, "கோவிலை காப்போம்; கோவையை காப்போம்" என்ற தலைப்பில் இந்து முன்ன‌ணியின‌ர் மாபெரும் க‌ண்ட‌ன ஆர்ப்பாட்டத்தை ந‌ட‌த்த‌ உள்ளோம்", என்று கோவையில் இந்து முன்ன‌ணி, மாநில‌ த‌லைவ‌ர் காடேஸ்வ‌ரா சுப்பிர‌ம‌ணிய‌ம் தெரிவித்துள்ளார்.



இன்று கோவையில் செய்தியாள‌ர்க‌ளை சந்தித்து பேசிய அவர், "வ‌ருகின்ற‌ 24ம் தேதி "கோவிலை காப்போம்; கோவையை காப்போம்" என்ற தலைப்பில் இந்து முன்ன‌ணியின‌ர் மாபெரும் க‌ண்ட‌ன ஆர்ப்பாட்டத்தை ந‌ட‌த்த‌ உள்ளோம்.

ச‌மீப‌ கால‌மாக‌ முஸ்லிம் அமைப்பின‌ர் கோவையின் அமைதிக்கு குந்த‌க‌ம் விளைவிக்கும் செய‌ல்க‌ளில் ஈடுப்ப‌டுகின்ற‌ன‌ர். இந்துக‌ள் வ‌சிக்க‌ கூடிய‌ ப‌குதியில் குர் ஆன்னை வ‌ழங்குகின்ற‌ன‌ர். மேலும், 1998 ல் குண்டுவெடிப்பை நிக‌ழ்த்திய‌வ‌ர்க‌ளை விடுத‌லை செய்ய‌க்கோரி முஸ்லிம் அமைப்புக‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் கோவையின் அமைதியை கேள்விக்குறியாக்கி வருகிறது. இதனை, கண்டு கொள்ள‌மால் உள்ள காவ‌ல் துறையின‌ரையும் க‌ண்டிக்கிறோம்.



கர்நாட‌காவில் ந‌ட‌ந்த‌ ஹிஜாப் பிர‌ச்ச‌னையை, த‌மிழ‌க‌த்தில் உருவாக்கி ம‌த‌பக‌ல‌வ‌ர‌த்தை ஏற்ப‌டுத்த‌ முஸ்ஸீம் அமைப்புகள் முய‌ற்சி செய்த‌ன‌ர். மேலும், கோவையில் பழ‌மையான முத்த‌ண்ணன் குள‌ம், அங்காள‌ம்ம‌ன் கோவில் போன்ற‌வை ஈடிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேர்மையாக‌, ம‌த‌சார்ப‌ற்ற‌ முறையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும்", எவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...