கோவை விமான நிலையத்தில் 'மர்ம பெட்டியால்' பரபரப்பு - வெடிகுண்டு பரிசோதனை…!

இன்று மாலை கோவை விமான நிலையத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையை அடுத்து, விமான நிலைய வரவேற்பு முகப்பில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது.


கோவை: இன்று மாலை கோவை விமான நிலையத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையை அடுத்து, விமான நிலைய வரவேற்பு முகப்பில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது.

கோவை விமான நிலையத்திற்கு இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் உள்ளிட்டோர் சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தனர்.

இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் முகப்பு அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று ஒரு மர்ம பெட்டி நீண்ட நேரமாக இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் அதில் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா..? என சோதனையிட்டனர்.



இதையடுத்து, அந்த பெட்டியின் உரிமையாளர் யாராவது வருவார்களா? என பெட்டியை சுற்றி பாதுகாப்பு அமைத்து காத்திருந்தனர்.



இதையடுத்து, விமான நிலைய அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், அந்த பெட்டி விமான நிலைய அலுவலகத்திற்கு சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

முக்கிய அரசியல் தலைவர்கள் வரும் நேரத்தில், விமான நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம பெட்டியால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...