பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து 3 நாள் வேலை நிறுத்தம் - கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் ஜேசிபி, பொக்லைன், டோசர் உள்ளிட்ட வாகனங்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.


கோவை: பெட்ரோல், டீசல், காப்பீடு ஆகியவற்றின் விலை உயர்வுக்கு எதிராக ஜேசிபி, பொக்லைன் வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் மூன்று நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், உதிரி பாகங்கள், காப்பீடு ஆகியவற்றின் கடும் விலை உயர்வால் அதிக நஷ்டம் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

மேலும், இதனால் வங்கிக் கடன் கட்ட முடியவில்லை எனக் கூறிய அவர்கள், மத்திய, மாநில அரசுகள் விலையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், ஜேசிபி, பொக்லைன், டோசர் உள்ளிட்ட 1500 எர்த் மூவர்ஸ் வாகனங்களும், அன்னூர் வட்டாரத்தில், 150 வாகனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று முதல் 3 நாள் தொடர்ந்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...