கோவை வால்பாறை அருகே யானை விரட்டும் பணியின் போது கீழே விழுந்த வேட்டை தடுப்பு காவலர் உயிரிழப்பு…!

நெஞ்சு வலிப்பதாக கூறிய அவரை, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை வால்பாறை அருகே யானை விரட்டும் பணியின் போது கீழே விழுந்த வேட்டை தடுப்பு காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வால்பாறை அடுத்த மாணாம்பள்ளி, மந்திரமட்டம் பகுதியில் தனியாகச் சுற்றிய பெண் யானையை, வழக்கமான ரோந்து பணியின் போது, வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.

அப்போது வேட்டை தடுப்பு காவலர் ரவிச்சந்திரன் (46) என்பவர் கீழே விழுந்து காயமடைந்தார்.

நெஞ்சு வலிப்பதாகக் கூறிய அவரை, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு, மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...