கோவை மாநகராட்சி ஆணையருக்கு சமூகநீதி கட்சியின் தலைவர் கடிதம்..!

கோவை மாநகராட்சியில் வரிவசூலராக நியமிக்கப்பட்டுள்ளோர் குறித்து சமூகநீதி கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கோவை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளார்.


கோவை: சொத்து வரி சீராய்வு செய்ய வேண்டியிருப்பதால், கோவை மாநகராட்சியில் வார்டுக்கு ஒருவர் வீதம், 100 வரி வசூலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளுக்கு தலா ஒரு வரிவசூல் அலுவலர் என 100 வரிவசூல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 54-நபர்கள் அ.தி.மு.க ஆட்சியில் இரவோடு இரவாக நியமிக்கப்பட்ட இளநிலை உதவியாளர்கள் என திமுக ஆட்சி அமைத்த பிறகு வெளிச்சத்திற்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து 21-நபர்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் என்று சமூகநீதி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் இரவோடு இரவாக நேர்காணல் வைத்து நியமிக்கப்பட்ட நிலையில் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் 21-நபர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கின்றது என்கிறனர் சமூகநீதி கட்சியினர்.

இது தொடர்பாக சமூகநீதி கட்சி தலைவர் பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது;

கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களில் 21 நபர்களுக்கு தற்பொழுது வரி வசூல் செய்யும் அலுவலர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது.

எனவும், அவர்களுக்கு வழங்கிய பணி நியமனத்தை திரும்பத் தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் தற்பொழுது இந்த செயல் நீதி மன்றத்தை அவமதிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், விசாரணை முடியும் வரை இவர்களுகளை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...