கோவை பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீர்..!

இதனால், துர்நாற்றம் வீசி வருவதாகவும், கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் முன் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேமாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வீடு மற்றும் நிலங்கள் தங்களுடைய பெயரில் மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வர்.

இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிவு நீர் குழாய் கசிந்து அலுவலக வளாகத்தில் கழிவு நீர் குளம் போல் தேங்கி பாசம் பிடித்து காட்சியளிக்கிறது.



இத்தகைய சூழ்நிலையால் துர்நாற்றம் வீசி வருவதாகவும், கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நோய் பரவும் முன் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



அதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும் மழை பெய்யும் போது மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பெரும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...