கோவையில் தடை செய்யப்பட்ட 1 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் - ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது.

மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் நடைபெற்ற சோதனையில், செட்டிபாளையம் பகுதியில் மூதாட்டி ஒருவரது வீட்டில் மளிகை பொருட்கள் வைத்து கொள்வதாக கூறி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், 1 டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.



கோவை: கோவையில் அதிகளவு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வருவதையடுத்து,மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, செட்டிபாளையம் பெரிய குயிலி பகுதியில் தனியாக வசித்து வரும் மூதாட்டி ஒருவரது வீட்டில் மளிகை பொருட்கள் வைத்து கொள்வதாக கூறி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட1 டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட போலீசார் 1 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குட்காவை கடத்தி வந்து கோவையில் சில்லரை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

சம்பவம் குறித்து, மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...