பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலி: கேரளாவில் மே 1-ஆம் தேதி முதல் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி கட்டணம் உயர்வு அமலாகிறது…!

கேரளாவில் வரும் மே 1-ஆம் தேதி முதல் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டணங்களை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


கேரளா: தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை சற்று அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலத்தில்பேருந்து மற்றும் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று நடந்த கேரளா அமைச்சரவை கூட்டத்தில் கட்டண உயர்விற்கானஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் மே 1-ஆம் தேதி முதல் கேரளாவில் பேருந்து மற்றும் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி பேருந்துகளில் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல ரூ.8 லிருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக செல்லும் ஒவ்வொருகிலோ மீட்டருக்கும் 90 பைசாவிலிருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான விரைவு பேருந்து, அதிவிரைவு பேருந்து, டீலக்ஸ் பேருந்து கட்டணங்கள் அதற்கு தகுந்தார்போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆட்டோ கட்டணம் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.25 லிருந்து ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகு வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாயிலிருந்து ரூ.15 ஆக உயர்ந்துள்ளது. கால் டாக்ஸி கட்டணமும் ரூ.175 இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிக உந்து திறன் கொண்ட டாக்ஸிக்கு ரூ.200 லிருந்து ரூ.225 ஆகவும், கூடுதலாக கிலோமீட்டருக்கு ரூ.15 லிருந்து ரூ.18 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே பேருந்து, டாக்ஸி, ஆட்டோ கட்டணங்கள் உயர்விற்கு சில மாணவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...