கோவையில் 'மனைவியுடன் பேசாதே' என்று நண்பனிடம் கூறிய கணவருக்கு கத்திக் குத்து!

கோவையில் தனது மனைவியுடன், நண்பர் பேசியதை கண்டித்த கணவரை, அந்த நண்பர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சம்பவம் இரத்தினபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் தனது மனைவியுடன், நண்பர் பேசியதை கண்டித்த கணவரை, கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய நண்பரால், இரத்தினபுரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவை, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் குணா (எ) தனசேகரன், ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் வெள்ளலூரை சேர்ந்த சந்தோஷ். இவர்கள் இருவரும், குணா வீட்டில் மது அருந்துவது வழக்கம். இதனிடைய, சந்தோஷுக்கும், குணா மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைப் பார்த்த குணா, தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சந்தோஷ் மற்றும் குணாவின் மனைவியும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த குணா, சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும், வாக்குவாதம் முற்றி, இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது, சந்தோஷ், குணாவை கத்தியால் குத்தி தாக்கி விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து, குணா ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...