கோவை - இலங்கை இடையே ஏப்ரலில் துவங்க இருந்த விமான சேவை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு.!

இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் காரணமாக, கோவை - இலங்கை விமானப் போக்குவரத்து அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு ஆகிய நாடுகளுக்கு விமான போக்குவரத்து வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்படி, கோவை - இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த விமான சேவை 2 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை இந்த மாதம் (ஏப்ரல்) மீண்டும் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விமான சேவை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: "இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இருந்தபோதும, இலங்கையிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், சென்னைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை - இலங்கை இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை ஏப்ரல் மாதத்தில் மீண்டும் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மீண்டும் விமான சேவை துவக்கப்படுமா..? அல்லது மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா..? என்பதை அன்றைய சூழலை பொறுத்து அறிவிக்கப்படும்", இவ்வாறு கோவை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்சமயம், கோவை- ஷார்ஜா மற்றும் கோவை - சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...