கவர்னர் கார் மீது கருப்பு கொடி வீசிய விவகாரம்: காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்..!

கவர்னர் கார் மீது தாக்குதல் நடத்துவது, அரசியல் மாண்பை குலைக்கும், அநாகரிகமான செயல் எனவும், கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


கோவை: கவர்னர் பயணத்தின் போது, கருப்பு கொடிகள் வாகனம் மீது வீசப்பட்ட இதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை, தர்மபுரம் ஆதீனத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி சென்ற போது, அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்பு கொடிகளையும், கட்டைகளையும், வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதில், தி.மு.க., கூட்டணி கட்சிகளான கம்யூ.,- வி.சி.க.,- ம.ம.க.,- எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்டோர் ஈடுபட்டனர். போலீஸ் கண் முன் இந்த செயல் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஆளும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் கவர்னர் மீது தரக்குறைவான விமர்சனம் மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கவர்னர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே அனைத்து விஷயங்களிலும் முடிவு செய்கிறார் என்பதை இந்த கும்பல் மறந்து விடுகிறது.

வாகனம் மீது தாக்குதல் நடத்துவது, அரசியல் மாண்பை குலைக்கும், அநாகரிகமான செயல். கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...