கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்த முதியவர் மீது ஆசிட் வீச்சு - இளைஞர் கைது....!

கோவை செல்வபுரம் அடுத்த சொக்கம்புதூர் பகுதியில் டிவியில் சத்தத்தை அதிகமாக வைத்திருந்ததாக கூறி, பக்கத்து வீட்டுக்காரர் மீது ஆசிட் வீசிய வீரமணி என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை செல்வபுரம் அடுத்த சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். டிவியில் சத்தத்தை அதிகமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் வீரமணி (30) என்பவர் முதியவரின் வீட்டிற்குள் புகுந்து டிவியின் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். பின்னர், இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த வீரமணி ஆசிட்டை எடுத்து முதியவர் முகத்தில் வீசியுள்ளார். ஆசிட் முகத்தில் பட்டதையடுத்து, முதியவர் அலறி துடித்துள்ளார். ஆசிட் வீச்சில், அவரது முகம், வாய் மற்றும் கண் பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, சம்பத் செல்வபுரம் போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...