கோவை கற்பகம் உயர்கல்வி கழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 'பிரணயா 22' போட்டி

தனிநபர் நடனம், குழு நடனம், ஒற்றையா், குழுப் பாட்டுப் போட்டி, குறும்படம், மீம்ஸ் உருவாக்கம், முக வர்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு விதமான பொழுதுபோக்கு போட்டிகள் நடைபெற உள்ளன.


கோவை: கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் ”பிரணயா 22”, என்ற அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இரண்டு நாள் (ஏப்ரல் 21-22) போட்டி நடைபெறவுள்ளது.



விழாவின் ஒரு பகுதியாக, தனிநபர் நடனம், குழு நடனம், ஒற்றையா், குழுப் பாட்டுப் போட்டி, குறும்படம், மீம்ஸ் உருவாக்கம், முக வர்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு விதமான பொழுதுபோக்கு போட்டிகள் நடைபெற உள்ளன.



"பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கு, வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை தோ்ந்தெடுக்க பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் வரவுள்ளனர்.

மேலும், விழாவில் பல்கலைக்கழக வேந்தர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், முதன்மையர்கள், உள்ளிட்ட பேராசிரியர்களும், மாணவர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள இருக்கின்றனர்", என்று விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...