கோவையில் வடமாநில தொழிலாளிகளை குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற நபர் கைது….!

கோவை பாலக்காடு நெடுஞ்சாலை அருகே கே ஜி சாவடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 2.5 கிலோ கஞ்சாவை வைத்திருந்த ராஜன் என்ற நபரை பிடித்தனர்.


கோவை: கோவை திருமலையாம்பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற நபரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்தனர்.

கோவை பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் பிரிவு அருகே கே ஜி சாவடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் சோதனை செய்தபோது அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம், மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜன் (43) என்பதும், அவர் கிணத்துக்கடவு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர் கஞ்சாவை வாங்கி வடமாநிலத் தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...