தமிழை சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகத்திற்கு மாநில அரசின் விருது மற்றும் ஊக்கத்தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…!

தமிழகத்தில் இயங்கிவரும் தமிழ் செய்தி ஊடகங்களில் தமிழை சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகத்துக்கு மாநில அளவிலான சிறந்த தமிழ் உச்சரிப்பில் விருது மற்றும் ரூ.5 லட்சம் வழங்கப்படும்.


கோவை: தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய தொல்லியல் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 3,000 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் மொழி.

அகழ்வாய்வு அடிப்படையில் அசோகர் காலத்திற்கு முன்பிருந்து எழுத்துக்களுடன் கூடிய மொழி தமிழ்மொழி. தனித்து இயங்கும் சிறப்பு வாய்ந்த மொழி தமிழ் மொழி என குறிப்பிட்டார். அதன் பின்னர், தமிழ் வளர்ச்சி துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாணவர்களிடையே தமிழ் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழ் மன்றம் அமைத்து தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்த ரூ.5.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள 6,218 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி நடத்த ரூ.5.6 கோடி வழங்கப்படும் என்றும் தமிழ் பல்கலைக்கழகங்களில் கட்டமைப்பு மேம்பாட்டு பணிக்காக ரூ.2 கோடி, திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற திருக்குறள் மாநாடு நடத்த ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல, தமிழகத்தில் இயங்கிவரும் தமிழ் செய்தி ஊடகங்களில் தமிழை சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகத்துக்கு மாநில அளவிலான சிறந்த தமிழ் உச்சரிப்பில் விருது வழங்கப்படும் என்றும் அதனுடன் ரூ.5 லட்சம் வழங்கப்படும், என்று அமைச்சர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...