கோவை மதுக்கரை அருகே தனியார் கல்லூரி ஆக்கிரமித்திருந்த ரூ.8.40 கோடி நிலத்தை அதிரடியாக மீட்ட அதிகாரிகள்..!

கட்டிடத்தை பறிமுதல் செய்து அரசு கணக்கில் சேர்த்ததோடு, இந்த இடத்தில் மகளிர் சுய உதவி குழு பங்களிப்போடு துரித உணவுகள் தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ளத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை சீரபாளையம் ஊராட்சியில் தனியார் கல்லூரியிடமிருந்த ரூ.8.40-கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.



கோவை மாவட்டத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட அரசு நிலங்களைக் கண்டறிய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், சீரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சனாரி நெடுஞ்சாலை பகுதியில் சோதனை செய்த போது, மதுக்கரை ஒன்றிய சீரபாளையம் ஊராட்சியில் சுமார் 42-சென்ட் நிலம், அபிராமி நர்சிங் கல்லூரி வசம் இருந்தது தெரியவந்தது.



ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை காலி செய்யக்கோரி பலமுறை அறிவுறுத்தியும், கல்லூரி நிர்வாகம் உடன்படாததால், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தலைமையில் ஊராட்சி தலைவர், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்பிலிருந்த 42-சென்ட் இடத்தை மீட்டனர். சுமார், ரூ.8.40 கோடி மதிப்புள்ள அரசு இடம் மற்றும் கட்டிடம் மீட்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கல்லூரி வளாகத்தில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும் பறிமுதல் செய்து அரசு கணக்கில் சேர்த்ததோடு, அந்த இடத்தில் மகளிர் சுய உதவிக் குழு பங்களிப்போடு துரித உணவுகள் தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ளத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.

மேலும், இந்த பகுதியைச் சுற்றிலும் உள்ள தனியார் கல்லூரிகள் விடுதிகள், தொழிற்சாலைகள் அதிக அளவு ஊராட்சிக்கு வரி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அடுத்த நடவடிக்கையாக, தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள், மருத்துவமனைகள் தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி ஆகியவற்றை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கையினால் 8 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடம் மீட்கப்பட்டுள்ளது, சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...