‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்: ரூ.719.22-கோடி செலவு - மாநகராட்சி கணக்கு குழு கூட்டத்தில் தகவல்..!

கோவை மாநகராட்சியில் 2016-யில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இன்று வரை ரூபாய் 719.22-கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்கான மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள நிலையில், கணக்குக்குழு தலைவராக கோவை மாநகராட்சியின் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தீபா தளபதி இளங்கோ, பொறுப்பேற்றுள்ளார்.

கோவை மாநகராட்சி மாமன்றத்தில் கணக்கு குழு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தொடர்பாகவும், செலவினங்கள் தொடர்பாகவும் தீபா தளபதி இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் பதில் அளித்தது என்னவென்று கோவை மாநகராட்சி மாமன்றத்தின் கணக்கு குழு தலைவராக உள்ள தீபா தளபதி இளங்கோ கூறியதாவது;

ஸ்மார்ட் சிட்டி திட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மத்திய அரசின் நிதியாக ரூபாய் 490 கோடியும், மாநில அரசு நிதியாக 500 கோடியாகவும் வழங்கியுள்ளது.

தற்போது நிலைப்பாட்டின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 978.73 கோடி ரூபாய்க்கு 56 பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், தற்போது 24.05 கோடி ரூபாய் நிதியின் கீழ் 32 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது எனவும், நடைபெற்று வரும் 14 பணிகளுக்கு 478.17 கோடி ரூபாய் செலவிடப்படத் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், மேற்கொள்ளவுள்ள புதிய 10 பணிகளுக்கு 16.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு மட்டுமே 150 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது எனவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இதுவரை செய்யப்பட்ட செலவினங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி ஆணையரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் இதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...