மத்திய அரசின் 'போஷன் அபியான்' திட்டம் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி..!

கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, 5-கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை பாஜகவினர் நடத்தினர்.



கோவை: மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் குறித்து எடுத்துரைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை பாஜகவினர் நடத்தினர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி முல்லை நகரில் உள்ள அங்கன்வாடியில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் குறித்து (குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான சத்துணவு திட்டம்) விளக்கமளிக்கப்பட்டது.



பாஜக இளைஞரணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம், மாநில செயலாளர் மலர்கொடி, மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு அத்திட்டம் குறித்தும் பிரதமரின் திட்டங்கள் குறித்தும் கர்ப்பிணி பெண்களிடம் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் 5 கர்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி தனது சொந்த செலவில் கட்டிய இரண்டு கழிவறைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.



நிகழ்விற்கு முன்னதாக பிரீத்தி லட்சுமி முருகானந்தம் ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாஜகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...