கோவையில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து சாமியானா மேற்கூரையில் தீ பிடித்ததால் பரபரப்பு..!

தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து சாமியானா மேற்கூரையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதனை கண்ட பாஜகவினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம் கலந்து கொண்டார். அங்கிருந்த மூன்று தூய்மை பணியாளர்களுக்கு முருகானந்தம் பாத பூஜைகள் செய்தார்.

இதையடுத்து, தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது பாத பூஜை நிகழ்வு முடிந்த பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமியானா டென்ட் அடியே நின்று தூய்மை பணியாளர்கள் மத்தியில் முருகானந்தம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரை வரவேற்க வைத்த பட்டாசு சரம் வெடித்து சிதறியதால் சாமியானா டென்ட் மேற்கூரையில் விழுந்து ஒரு பகுதியில் மட்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதனை கண்ட பாஜகவினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...