கோவையை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!

பெங்களூருவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பெங்களூர் ராமன் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்காக விளையாடி முதலிடத்தை பிடித்த கோவையைச் சேர்ந்த கோல் கீப்பர் முஹம்மத் ரிஃபாத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டினார்.


கோவை: கோவையை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் எப்சி போன்ற முன்னணி அணிகள் பங்குபெறும் மாநில ஜூனியர் கால்பந்து போட்டி பெங்களூரு கால்பந்து சங்கத்தின் சார்பாக பெங்களூர் கால்பந்து அரங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது.

இதில் கோவையைச் சேர்ந்த TFSC அணியின் கால்பந்து வீரரான முஹம்மத் ரிஃபாத் (கோல் கீப்பர்) பெங்களூரில் ராமன் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிக்கு தேர்வாகி விளையாடி கர்நாடகாவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் இந்த முழு போட்டிகளிலும் சிறப்பாக சிறந்து விளங்கியுள்ளார். கோல்கீப்பர் என்கின்ற முறையில் பல போட்டிகளில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இவரின் விளையாட்டு, ரசிகர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் பல பயிற்சியாளர்கள் ஆகியவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், அவரைஊக்கப்படுத்தும் விதமாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு பரிசு கொடுத்து பாராட்டியுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...