'Nurture Nature Camp-2022': சிறுதுளி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இணைந்து நடத்திய 14-வது இயற்கை வளர்ப்பு முகாம்..!

கோவையில் இயற்கையின் வளர்ப்பையும், சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும், உணர்த்தும் வகையில் இன்று மேற்கு வட்டத்தைச் சேர்ந்த சிறுதுளி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இணைந்து நடத்திய 14-வது இயற்கை வளர்ப்பு முகாம் நடைபெற்றது.


கோவை: ‘நுர்ட்சர் நேட்சர்’Nurture Nature Camp என்ற முகாம் இயற்கையின் வளர்ப்பையும் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் இன்று கோவை மேற்கு வட்டத்தைச் சேர்ந்த சிறுதுளி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இணைந்து முகாமினை இன்று நடத்தினர்.



இந்த முகாமானது இன்றிலிருந்து சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது இதற்கான துவக்க விழா இன்று கோவை வி.ஓ.சி பூங்காவில் அமையப்பெற்றுள்ள பச்சை நாயகி என அழைக்கப்படும் அப்துல் கலாம் அவர்களால் நடவு செய்யப்பட்ட மரத்தின் அருகில் நடைபெற்றது.

இந்த முகாமில் சுமார் 70 மாணவர்கள் 13 பள்ளிகளிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர். முதல் நாளான இன்று நடைபெற்ற இந்த முகாமில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-

இந்த முகாமில் மாணவர்கள் அனைவரும்நீர்நிலைகள், விவசாய நிலங்கள் அனைத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி வழங்கப்படும். மேலும், இயற்கை குறித்த விழிப்புணர்வு மற்றும் இயற்கை வளர்ச்சி குறித்து கற்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், இறுதி நாளான சனிக்கிழமை அன்று பயிற்சியின் முடிவில் மாணவர்களின் புரிதலைச் சோதனை செய்யும் வகையில் வினாடி வினா நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.



இதில் கோவை மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டு தொடக்க உரையினை கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.

இதில் அவர் கூறியதாவது:-

பூங்காவிற்கு வந்ததிலிருந்து எவ்வாறான விஷயங்களை நீங்கள் கவனித்தீர்கள்என்று சோதனை செய்யலாம், இதனையெல்லாம் கவனித்தீர்கள் ? என்றும், இந்த முகாமினை பயனுற அமைத்துக் கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு வாழ்த்துகள் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...